சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மக்களை தேடி இந்திய மருத்துவம்

மூலிகை பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்ததால் நாளடைவில் சித்த மருத்துவத்தில் பின்னடைவு ஏற்பட்டது

Update: 2021-09-03 08:42 GMT

சிவகங்கையில் நடைபெற்ற மக்களை தேடி இந்திய மருத்துவம் முகாமில் பொதுமக்களுக்கு மூலிகை செடி வழங்கிய  கல்லூரி  முதல்வர் ரேவதி பாலன்

சிவகங்கையில் மக்களை தேடி இந்திய மருத்துவம் முகாம் 

சிவகங்கை மருத்துவக்கல்லூரி சித்த மருத்துவ பிரிவில், மக்களை தேடி இந்திய மருத்துவம் என்ற திட்டத்தை யொட்டி,  மூலிகைச்செடிகள் வழங்கும் விழா, கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், சித்த மருத்துவர் காந்திநாதன் பேசுகையில், மூலிகை செடிகள் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.  இன்று கற்கால மனிதன் முதல் இக்கால மனிதன்  வரை மூலிகைச் செடி மூலம், நோய்களை குணப்படுத்த முடியும்  என்று சித்த மருத்துவ  வரலாறு கூறுகிறது.  விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகவும் மூலிகைச் செடிகள் கிடைக்காததது.  மக்களிடம்  மூலிகை பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்ததால்  நாளடைவில் சித்த மருத்துவத்தில் பின்னடைவு ஏற்பட்டது . கடந்த காலங்களில் சித்த மருத்துவத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்து  வந்துள்ளது என்றார். முன்னதாக   பயனாளிகளுக்கு மருத்துவ மூலிகைச் செடிகளை முதல்வர் ரேவதி பாலன் வழங்கினார்.


Tags:    

Similar News