சிவகங்கை மாவட்டம்: இதுவரை 17.11லட்சம் பேருக்கு தடுப்பூசி : ஆட்சியர் தகவல்

கோவிஷீல்டு 42 ஆயிரத்து 528 கோவாக்ஸின் 11,650 என மொத்தம் 54 ஆயிரத்து 170டோஸ் கையிருப்பில் உள்ளது

Update: 2022-01-29 13:20 GMT

சிவகங்கையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி.

சிவகங்கை மாவட்ட அளவில் ஜனவரி 27 வரை 17.11லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:  மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 10 லட்சத்து 12 ஆயிரத்து 226 பேர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி 6,95,423 பேரும் என மொத்தம் 17 லட்சத்து 11 ஆயிரத்து 033 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.  இதில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 49 ஆயிரத்து 717 பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இது தவிர பூஸ்டர் தடுப்பூசி 3 ஆயிரத்து 334 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இது தவிர கோவிஷீல்டு 42 ஆயிரத்து 528 கோவாக்ஸின் 11,650 என மொத்தம் 54 ஆயிரத்து 170டோஸ் கையிருப்பில் உள்ளது. இன்று மாவட்ட அளவில் 20 வது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News