சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி

Update: 2021-04-23 16:15 GMT

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி செய்தியாளர்களை சந்திந்து தெரிவிக்கையில்

தமிழகத்தில் இரண்டாம் அலை உருவாகியுள்ள நிலையில், மாவட்டத்தில் தினமும் சராசரியாக 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 1500 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்பத்தில் இருவருக்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டால் அது பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது ‌.

மாவட்டத்தில் 50000 பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 10000 பேர் இரண்டாவது தடுப்பூசி போட்டுள்ளனர். 9000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. சிறிய அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும்‌. 15 நாட்களில் இறப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்

Tags:    

Similar News