சசிகலாவை அதிமுகவில் இணைக்கக்கூடாது -சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் தீர்மானம்

ஆடியோ வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்தி அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவை அதிமுகவில் இணைக்கக்கூடாது ஓபிஎஸ், - இபிஎஸ் க்கு சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் வேண்டுகோள் விடுத்து தீர்மானம்.

Update: 2021-06-19 13:28 GMT

சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவுடன் மறைமுக கூட்டணியில் ஈடுபட்டு அதிமுகவை தோல்வியடையச் செய்த சசிகலாவின் போக்கை கண்டித்தும், ஆடியோ வெளியீட்டு குழப்பம் ஏற்படுத்தி சூழ்ச்சியால் அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவை இயக்கத்தினுள் அனுமதிக்கக் கூடாது என ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை வேண்டிக் கொள்வதாகவும், கட்சிக்கு துரோகம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News