2 மாதங்களில் 52 செல்போன்கள் பறிமுதல்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

திருடுபோன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

Update: 2021-08-19 13:39 GMT

சிவகங்கையில் கடந்த 2 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 92 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.

திருடுபோன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதங்களில் சுமார் 9.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 52 விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், செல்போன் டவர்களை வைத்து திருடுபோன செல்போன்கள் உபயோகப்படுத்தப்படும் இடங்களைக் கண்டு பிடித்து திருடர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 92 செல்போன்களை இன்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கண்காணிப்பாளர் செந்தில்குமார் அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

Tags:    

Similar News