சிங்கம்புணரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருந்தகததிற்கு சீல்

சிங்கம்புணரியில் மருந்து கடை என்ற பெயரில் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்த மருந்தகத்திற்கு வட்டாட்சியர் திருநாவுக்கரசு சீல் வைத்தார்,

Update: 2021-05-07 03:30 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகர் பகுதியில் நேற்று காலை முதலே வட்டாட்சியர் திருநாவுக்கரசு கொரோனா ஊரடங்கு சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில் பஸ்நிலையம் எதிரில் உள்ள ஒரு மெடிக்கலில் ஆய்வு செய்யும்பொழுது மெடிக்கலில் உள்புறம் உள்ள ரகசிய அறையில் இருந்து 70 வயது மூதாட்டி ஒருவர் வெளியே வருவதை கவனித்தார்.

அவரிடம் விசாரிக்கும் பொழுது ஊசி போட்டுக் கொண்டு வந்ததாக கூறியதாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த வட்டாட்சியர் திருநாவுக்கரசு அந்த ரகசிய அறையில் பார்வையிடும் பொழுது அங்கு மருத்துவ உபகரணங்கள் நோயாளி பரிசோதனை செய்யும் மேசை ஊசி மருந்து பொருட்கள் பயன்படுத்திய ஊசிகளை முதலியவற்றை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே மருந்து கடையை மூடி சீல் இட உத்தரவிட்டார். பஸ் நிலையம் எதிரில் அதிகம் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் மருந்து கடை என்ற பெயரில் மருத்துவர் இல்லாமல் நோயாளிகளுக்கு ரகசியமாக பல நாட்களாக ஊசி போடுவது, மருந்து மாத்திரை கொடுப்பது போன்ற மருத்துவ சிகிச்சை செய்து வந்தது தெரியவந்தது. வட்டாட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடம் பாராட்டை பெற்றது. காவல்துறை, பேரூராட்சி நிர்வாகம், மற்றும் வருவாய் துறையினர் இந்நிகழ்வில் போது உடன் இருந்தனர்

Tags:    

Similar News