தேவகோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறிய 4 ஜவுளி கடைகளுக்கு சீல்

திருப்பத்தூர் சாலை, வாடியார்வீதி, பேருந்து நிலையம் பின்புறம் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய செயல்பட்ட 4 ஜவுளி கடைகளை சீல் வைத்தனர்.

Update: 2021-06-22 14:02 GMT

தமிழக அரசு தற்போது தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் இரண்டாவது கொரானா அலையை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் தேவகோட்டை நகரில் காவல்துறை ஆய்வாளர் சரவணன், வட்டாட்சியர் ராஜரத்தினம் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது திருப்பத்தூர் சாலை, வாடியார்வீதி, பேருந்து நிலையம் பின்புறம் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய 4 ஜவுளி கடைகள் திறந்து வியாபாரம் செய்து வந்தனர் அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.

மருத்துவ வல்லுனர்கள் மூன்றாவது அலை ஏற்படும் பொதுமக்கள் பாதுகாப்பக இருக்க வேண்டும் தொழில் நிறுவனங்களும் கடைகளும் தமிழக அரசு விதித்த விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே மூன்றாவது அலையை தவிர்க்கமுடியும் என்று கூறிய நிலையிலும் இதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் துணி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்யும் கடைகள் மீது தற்போது தேவகோட்டை காவல்துறையினரும் வட்டாட்சியரும் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News