11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொதுமக்களுக்கு பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்களை வழங்க கண்விழித்திரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Update: 2021-10-11 08:22 GMT

சிவகங்கையில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேஷன்கடை  ஊழியர்கள்

11அம்ச கோரிக்கையை  நிறைவேற்ற வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது .இதில் கொரானா பெரும் தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு கண்விழித்திரை மூலம் பதிவு செய்து பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடித்தம் செய்யப்படும் வைப்பு நிதியை சிக்கன நாணய சங்கம் மூலம், அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி செய்து தரவேண்டும்.நியாவிலை கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக வழங்க வேண்டும் என்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News