ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேக்கம்: பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

ரயில்நிலையம், யூனியன் அலுவலகம், நகராட்சி அலுவலகம், கோட்டாட்சியர் ஆகிய அலுவலகங்களுக்கு இப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும்

Update: 2021-10-04 08:12 GMT

 சிவகங்கையில் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கையில் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரயில் நிலையம், யூனியன் அலுவலகம், நகராட்சி அலுவலகம்,கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்க ளுக்கு, பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இங்கு மழை நீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் இருப்பதால் பொதுமக்களும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டம், தொடையூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் காரில் கடக்க முயன்ற ஓசூரில் பணிபுரியும் அரசு மருத்துவர் சத்யா, அதில் தேங்கியிருந்த  மழை நீரில் மூழ்கி பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதைப் போல, சிவகங்கையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில்  தேங்கி நிற்கும் மழை நீரில் எவரும் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம்  இந்தப்பாலத்தில்  தேங்கி நிற்கும் மழை நீரை மோட்டார் வைத்து வெளியேற்ற  துரித நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பதை  அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News