கல்வி சான்று தர மறுக்கும் தனியார் பள்ளிகள் ; முழு கல்வி கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் : பெற்றோர் வேதனை

மாணவர்களின் -கல்வி சான்று- தர மறுக்கும்- தனியார் பள்ளிகள்முழு கல்வி கட்டணமும் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என தனியார் பள்ளிகள் கூறவதால் பெற்றோர் மன வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2021-06-23 15:20 GMT

தனது பிள்ளையை அரசு பள்ளியில் சேர்ப்பதற்காக தனியார் பள்ளியில் மாற்று சான்றிதழ் பெற வந்த மகாலட்சுமி.

மாணவர்களின் கல்வி சான்று தர மறுக்கும் தனியார் பள்ளிகள், முழு கல்வி கட்டணமும் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என தனியார் பள்ளிகள் கூறுவதால்  பெற்றோர் மன வேதனை அடைந்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் உள்ள சில தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு , 5, 6, ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் கல்வி கட்டணம் கட்ட முடியாத நிலையில் அரசு பள்ளிகளில் கட்டணம் இன்றி சேருவதற்கு தயாராக உள்ளனனர்.

அவர்கள் முன்பு படித்த தனியார் பள்ளிகளில் தாங்கள் படித்த கல்விச் சான்றிதழை கேட்டால் பள்ளி நிர்வாகம் தர மறுப்பதாகவும் முழு கட்டண தொகையை செலுத்தி சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்து வதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர். இதனால் மேலே படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக பெற்றோர் மன வேதனை அடைந்துள்ளனர்.

தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கலாம் என எண்ணியும் தனியார் பள்ளிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது பெற்றோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக  பாதிக்கப்பட்ட பெற்றோர் புலம்புகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகமும் , கல்வித் துறையும் தலையிட வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது

பேட்டி : பாதிக்கப்பட்ட மாணவர்களின் பல பெற்றோர் உள்ளனர். அவர்களில்  ராஜா, மகாலட்சுமி ஆகியோர்.


Tags:    

Similar News