கழிவுபொருட்களில் இருந்து மின்சாரம்: காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு பிரதமர் புகழாரம்

Update: 2021-08-29 12:14 GMT

மான்கிபாத் நிகழ்ச்சியில் சிவகங்கைமாவட்டம், காஞ்சிரங்கால் கிராமத்தைப்பெருமையுடன் குறிப்பிட்டு பேசிய பிரதமர் நரேந்திரமோடி.

கழிவுபொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் ஊராட்சியில் கழிவுகள் என்று ஒதுக்காமல் அந்தக் கழிவு பொருட்களையும் பயனுள்ள ஆக்க பொருளாக மாற்றலாம் என்று நிரூபித்து இன்று இந்திய பிரதமரையே மாதிரி கிராமமாக மேற்கோள்காட்டி பேச வைத்துள்ளது சிவகங்கை அருகேயுள்ள சிறிய கிராமங்களில் ஒன்றான காஞ்சிரங்கால்.


கழிவு பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்ற மிகப்பெரிய அறிவியலைக் கண்டுபிடித்துள்ளது காஞ்சிரங்கால் ஊராட்சி. இதற்கு மகுடம் சூட்டும் விதமாக இன்று நடைபெற்ற பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சியில், தங்களது கிராமத்தை பிரதமர் உதாரணமாக குறிப்பிட்டு பெருமைப்பட பேசியது, தங்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறுகின்றனர் காஞ்சிரங்கால் கிராம மக்கள்.ஒரே நாளில் பிரதமரின் ஒரே வார்த்தையில் இந்தியாவையே நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளதாக சிவகங்கை மாவட்ட மக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.

Similar News