அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்

Update: 2021-03-23 08:00 GMT

சிவகங்கையில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் மற்றும் 5 தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வரும் தேர்தலில் வேட்பாளர்கள் எவ்வாறு விதிமுறைகளை கடைபிடித்து தேர்தல் செலவுகள் வாகன விதிமுறைகள் செயல்பட வேண்டும் என்று என்று ஆலோசனை கூட்டத்தில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

Tags:    

Similar News