ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்றவர்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை...

வெளியில்வர வேண்டாம் என அறிவுரை

Update: 2021-05-11 10:15 GMT

சிவகங்கையில் 2 வது நாளாக வாகனங்களில் செல்பவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்

கொரோனா ௨ வதுஅலைகாரணமாக தமிழக அரசு 1௦ ம் தேதிமுதல் ௨௪ ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

பேருந்துகள் ஆட்டோக்கள் ஒட அனுமதி இல்லை.மளிகைககடைகள் ஒருசில கடைகள் மட்டும் மதியம் 12 மணிவரை திறக்க அனுமதி அளிக்கபட்டுள்ளது.

2வது நாளான இன்று சிவகங்கை நகரில் முழு ஊரடங்கு வணிகர்களாலும் பொதுமக்களாலும் கடைபிடிக்கபட்டது.

பேருந்துநிலையம் வெறிசோடி காணபட்டது. நகரில் ஒருசில வணிக நிறுவனங்களை தவிர மீதி உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கபட்டிருந்தன.

நகரே வெறிசோடி காணபட்டது.12 மணிக்கு மேல் தடையை மீறி .இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை காவல்துறையினர் தேவை இன்றி வெளியில்வர வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News