ஊரடங்கை மீறியவர்களை எச்சரித்த காவல்துறையினர்.

ஆவணங்களை பரிசோதித்த பிறகு எச்சரிக்கை

Update: 2021-05-10 11:50 GMT

சிவகங்கையில் ஊரடங்கை மீறி வருபவர்களை காவல்துறையினர்.எச்சரித்து அனுப்பினர்

கொரானா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதித்துள்ளது. 

அதன் படி இன்று அமைதியின்றி வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை பரிசோதித்த பிறகு எச்சரித்து அனுப்பினார்.

உரிய ஆவணங்கள் இன்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு தொடர்ந்து சிவகங்கை நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் கடைகள் அடைக்கப்பட்டு சாலையில் வெறிச்சோடி காணப்பட்டது.

பொதுமக்களிடமும், வாகன ஓட்டிகளிடம் கொரானா பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாக உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News