ஓடப்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கட்டாணிபட்டியில் போலீசார் விசாரணை

ஓடப்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கட்டாணிபட்டியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-06 03:19 GMT

கட்டாணிபட்டி கிராமத்தில் விசாரணை நடத்திய போலீசார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லாக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஓடப்பட்டி கிராமத்தில் கடந்த 2-ந்தேதி இரவு 11 மணி அளவில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் 5 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பி சென்றது.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் எஸ்.எஸ்.கோட்டை காவல்ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை மற்றும் போலீசார், பெட்ரோல் குண்டுகள் வீசி தப்பிச்சென்ற 5 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தெரிகிறது.  இதுதொடர்பாக மதகுபட்டி அருகே கட்டாணிபட்டியை சேர்ந்த அஜித்குமார் (வயது 21) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ஜெயபால் (19) உசிலம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கட்டாணிபட்டி கிராமத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, அந்த ஊர் பெரியவர்களிடம் மரியாதை தரும் விதமாக எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு உடன் இருந்தது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News