அழிந்துவரும் சிலம்பக் கலை: மீட்டெடுக்கும் முயற்சியில் பி.இ., பட்டதாரி வாலிபர்

பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

Update: 2021-08-12 12:49 GMT

பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு சிலம்பக் கலையை பயிற்சி அளித்து ஊக்குவித்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த வாலிபர் பெருமாள். இவர் பி.இ., இன்ஜினியரிங் பட்டதாரி. இவர் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு சிலம்பக் கலையை பயிற்சி அளித்து ஊக்குவித்து வருகிறார்.

இந்நிலையில் 08-08-2021 அன்று மதுரை வில்லாபுரம் ஆர்.கே இன்ஸ்டிடியுட் வாணி நர்சரி பள்ளியில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன இதில் முதலிடத்தில் 2 பேரும், இரண்டாமிடத்தில் 4 பேரும், மூன்றாம் இடத்தில் நான்கு பேரும் வெற்றி பெற்று சிவகங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களை பாராட்டும் விதமாக சிவகங்கை ஆயுதப்படை ஆய்வாளர் சீமான் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார் இந்நிகழ்ச்சி தொண்டி ரோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து மாஸ்டர் பெருமாள் தெரிவிக்கையில், சிலம்பக் கலையை பயின்றவர்களுக்கு வாதம், பித்தம், கபம், ரத்த ஓட்டம், மனதை ஒருநிலைப் படுத்தவும் நோய்களையும் குணப்படுத்தும்.

சிலம்பம் என்பது பாரம்பரிய முறையில் பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை தரும்.  இது ஒரு தற்காப்பு கலை என்றும் எல்லா இடங்களிலும் பயிற்சி அளிப்பது போல் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி பயிற்சியில் அடிமுறைகள் உள்ளதாகவும் இந்த கலையை பயின்றவர்கள் தனியாக எங்கும் வேண்டுமானாலும் செல்லலாம் என்றும் பெண்கள் தைரியமாக எந்த இடத்திற்கும் சென்று வரதுக்கு இந்த பயிற்சி ஒரு முக்கிய காரணம் என்றும் சிலம்பக் கலையை தேசிய விளையாட்டாக அரசு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News