சிவகங்கையில் தோட்டக்கலை துறை சார்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் திட்டம்

சிவகங்கையில் தோட்டக்கலை துறை சார்பில் 25 லட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2021-08-03 08:49 GMT

சிவகங்கையில் தோட்டக்கலை துறை சார்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது

சிவகங்கையில் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் தோட்டக்கலைத் துறை சார்பாக இரண்டரை ஏக்கர் பரப்பளவில் 25 லட்சம் நிதி ஒதுக்கிட்டில் தோட்டக்கலை நாற்றங்கால் பண்ணை அமைக்கும் திட்டத்தை இன்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் பலவகையான500 பழ மரக்கன்றுகளை நடவு செய்து, வளா்த்து இச்செடிகளை மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும், இதுதவிர சிவகங்கை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு தரமான தோட்டப்பயிர்கள், மர வகைகள் வழங்குவதன் மூலம் வேலைவாய்ப்பை வழங்கிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்ச்சியில் பலவகையான பழமரகன்றுகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நடவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் இத்திட்டத்தின் செயல்பாடு மற்றும் மரக்கன்றுகள் குறித்து ஆட்சியர்கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியின் போது தோட்டக்கலை துறை துணைஇயக்குனர் அழகுமலை, உதவி இயக்குனர் சக்திவேல் (நடவு பொருள்} மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News