இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் புறக்கணிப்பு: மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் மனு

கீழாயூர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் தங்களை புறக்கணித்ததாக கூறி மாற்று திறனாளிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-08-16 12:29 GMT

கீழாயூர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் தங்களை புறக்கணித்ததாக கூறி அப்பகுதி மாற்று திறனாளிகள் ஏராளமானோர் ஆட்சியரிம் கோரிக்கை மனு அளித்தனர்.

கீழாயூர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் தங்களை புறக்கணித்ததாக கூறி அப்பகுதி மாற்று திறனாளிகள் ஏராளமானோர் ஆட்சியரிம் கோரிக்கை மனு அளித்தனர்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளையான்குடி பகுதியில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கீழாயூர் கிராமத்தில் ஊரில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க , 130 பயனாளிகளுக்கும் தேர்வு செய்யும் பணி நடந்தது.

இதில் இளையான்குடி கீழாயூர் கிராமத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா பயனாளிகளை தேர்வு செய்தது வரவேற்கத்தக்கது என்றாலும் அந்தப் பட்டியலில் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் திரளாக வந்து மனு அளித்தனர்.

Tags:    

Similar News