நகராட்சி குப்பை கிடங்கில் தீவிபத்து: தீயணைப்புத் துறையினர் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்

அடிக்கடி மர்ம நபர்களால் குப்பைக் கிடங்குக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்று விடுவதும், பற்றி எறியும் தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிடுவதும் தொடர் கதையாகிவிட்டது.

Update: 2021-07-23 15:00 GMT

சிவகங்கை நகர எல்லைக்குள் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென நேரிட்ட தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது.  

சிவகங்கை, இந்திராநகர் பகுதியில்,நகராட்சியின் சார்பில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.நகரின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கை சுற்றி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இந்திரா நகர் குடியிருப்பு,மின் மயானம் ஆகியவை அமைந்துள்ளன.குப்பை கிடங்கில் குப்பை மலை போல் தேங்கி இருக்கும் நிலையில், இன்று குப்பை கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவம் இடத்துக்கு  வந்து  சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அடிக்கடி மர்ம நபர்களால்  குப்பைக் கிடங்குக்கு   தீ வைத்து விட்டு தப்பி சென்று விடுவதும், பற்றி எறியும் தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிடுவதும் தொடர் கதையாகிவிட்டது.

மருத்துவ கல்லூரி மருத்துவமனை நோயாளிகள் மற்றும் இந்திராநகர் குடியிருப்புவாசிகள் மூச்சு திணறல் மற்றும் சுவாசப் பிரச்சனை போன்ற பாதிப்புகளுக்கும்  உள்ளாகி வருகின்றனர். இச்சூழ்நிலையில், குப்பை கிடங்கில் தீ வைத்து செல்லும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் காவல்துறையினருக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News