கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை துவக்கி வைத்த அமைச்சர்

கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-10 08:26 GMT

கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை துவக்கி வைத்த அமைச்சர் பெரிய கருப்பன்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் தேசிய ரூர்பன் திட்டம் மூலம் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் உணவுப்பொருள் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றிற்கு 2 டன் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்காக காஞ்சிரங்கால் ஊராட்சி, சிவகங்கை நகராட்சி பகுதிகளில் தினமும் காய்கறி, கோழி, மீன் போன்ற உணவு பொருள் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவற்றை அரைத்து நீரில் கரைத்து அங்குள்ள கிடங்கில் ஊற்றி மீத்தேன் வாயுவான பின்பு அவற்றின் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் தயாரிக்கும் வடிவில் அமைக்கப்பட்டடுள்ளது. இத்திட்டத்தை காஞ்சிரங்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று துவங்கி வைத்தார்

Tags:    

Similar News