விற்பனை ஆகாததால் வியாபாரிகள் வேதனை...

தொடரும் ஊரடங்கு...

Update: 2021-05-10 08:41 GMT

சிவகங்கையில் பொருட்கள் விற்பனை ஆகாததால் வியாபாரிகள் வேதனை


கொரானா வைரஸ் 2ம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதித்துள்ளது.

அதன் படி இன்று காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை காய்கறி, பலசரக்கு, நடைபாதை கடைகளை திறக்க அனுமதி வழங்கியது.

நகரில் பேருந்து நிலையம், அரண்மனை வீதி, நேரு பஜார், காந்தி வீதி பகுதிகளில் திறக்க பட்ட காய்கறி, பலசரக்கு, நடைபாதை வியாபாரிகள் கடைகள் திறந்து வைத்தனர்.

ஆனால் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் குறைந்த அளவிலே வாங்கி சென்றனர். இதனால் பல வியாபாரிகள் வியாபாரம் ஆகாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இனி தொடரும் ஊரடங்கு காலங்களில் வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் வர தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விலைவாசி உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Tags:    

Similar News