மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க தற்காப்புக்கலை: தலைவருக்கு பாராட்டு

மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கும் ஊராட்சி தலைவருக்கு பாராட்டு குவிகிறது.

Update: 2022-01-23 05:53 GMT
கொட்டக்குடி கீழ்பாதி ஊராட்சியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்.

சிவகங்கை அருகே உள்ள கொட்டகுடி கீழ்பாதி ஊராட்சி மன்ற தலைவராக மகேந்திரன் செயல்பட்டு வருகிறார். இவர் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் தேவையறிந்து நாடக மேடை, களம் அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சுடுகாடு அமைத்தல் என 27 திட்டங்களை அரசு செலவில் அமைத்து கிராம மக்களின் நன்மதிப்பைப் பெற்று உள்ளார்.

இந்நிலையில் கொரானா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாத நிலையில் வீடுகளில் முடங்கி இருப்பது அறிந்து, அவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக தற்காப்பு கலையான சிலம்பம், மல்யுத்தம், கராத்தே போன்ற பயிற்சிகளை உரிய பயிற்றுனர்களை கொண்டு இலவசமாக வழங்கி வருகிறார்.

இதற்காக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை தனது சொந்த பணத்தில் செலவு செய்து வருகிறார் ஊராட்சி மன்ற தலைவர். இதனால் சிறுவர் சிறுமியர்கள் ஆர்வத்துடன் தற்காப்புக் கலையை பயின்று வருகின்றனர். இதன்மூலம் அவர்கள் தங்களுக்கு தேவையான பாதுகாப்பை அவர்களே பெறுவதால் தன்னம்பிக்கையுடன் திகழ்கின்றனர்.

மேலும் வீடுகளில் முடங்கிவிடாமல் ஆர்வத்துடன் தற்காப்புக்கலையை பயின்று வருகின்றனர். தன் கிராம மக்களை ஒவ்வொருவரின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உரிய உதவிகளை செய்து வரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News