சிவகங்கை அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 5 பேர் மீது வழக்குப்பதிவு

சிவகங்கை அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-08-17 10:41 GMT

கோமாளிப்பட்டியில் நடந்த மஞ்சுவிரட்டு.

சிவகங்கை அருகே கோமாளிப்பட்டி கோவில் திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 200 க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே கட்டு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது.

இதனைக் காண சிவகங்கை, இடையமேலூர் ஒக்கூர், சக்கந்தி புதுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் காண குவிந்தனர்.

அப்போது காளைகள் முட்டியதில் 20க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தியதாக கோமாளிபட்டியை சேர்ந்த மாணிக்கம், ஏலப்பன், முனியசாமி, மாணிக்கம், சின்னக்கண்ணு ஆகிய 5 பேர் மீது சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News