அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: போலீஸை கண்டதும் "காளைகள்" ஓட்டம்!

சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டியில் அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டின்போது, போலீசாரை கண்டதும் மாடுபிடி வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்.

Update: 2021-04-27 08:33 GMT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை அருகே மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அனுமதி தரப்படாத நிலையில், இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில்,  சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் மஞ்சுவிரட்டு பிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு,  கோவில்பட்டி வயல் பகுதியில் நூற்றுக்கணக்கான காளைகளை,  மாட்டின் உரிமையாளர்கள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விட்டனர்.

இதில், ஆர்வமுடன் பங்கேற்றா மாடுபிடி வீரர்கள்,  ஏராளமான மாடுகளை பிடித்து அடக்கி தங்கள் வீரத்தை காட்டிக் கொண்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடக்கும் தகவல் அறிந்து, போலீசார் அங்கு வந்தனர்.

திடீரென போலீசார் வந்ததை சற்று எதிர்பாராத மாடுபிடி வீரர்களும், அங்கு திரண்டிருந்த கிராம மக்களும், கண் இமைக்கும் நேரத்தில் நாலாபுறமும் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி தடைபட்டது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News