சிவகங்கை அருகே மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது. வழிமறித்த கார் ஓட்டுனர் மாயம்

சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்தூர் காவல் நிலைய சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-07-22 06:42 GMT

மணல் கடத்தல் லாரியை பின்தொடர விடாமல் வழிமறித்த கார் ஓட்டுனர் விஜய்

சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்தூர் காவல் நிலைய சோதனைச் சாவடியில் மணல் கடத்திச் சென்ற லாரி நிற்காமல் சென்றது.  மணல் கடத்தல் லாரிக்கு பாதுகாப்பாக திமுக கொடி கட்டிய கார். உடன் வந்தது. திருவேகம்பத்தூர் காவலர்கள் புரோஸ்கான், தாஸ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று பிடிக்க முயற்சித்த போது, திமுக கொடி கட்டிய கார் காவலர்களை செல்லவிடாமல் ரோட்டின் குறுக்கே வண்டியை நிறுத்தி லாரியை தப்பிக்க விட்டது. ஆனால் கார் ஓட்டுனர் மீது  எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விடுவித்துள்ளனர். 

இது குறித்த வீடியோ இணையத்தில் பரவியது.  உடனடியாக இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் தேவகோட்டை பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தார்.

மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், விடுவிக்கப்பட்ட கார், மற்றும் மணல் கடத்திய லாரி மற்றும் ஆகியவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் தேவகோட்டை நகர காவல் நிலையம் நேரில் வந்து DSP ரமேஷுக்கு உத்தரவிட்டார் .

இதனை தொடர்ந்து மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் பிரபு கைது செய்யப்பட்டார். மேலும் திமுக கொடி கட்டிய காரில் வந்த விஜய் இதுவரை கைது செய்யப்படவில்லை.

Tags:    

Similar News