அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா

சிவகங்கை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் கந்தசஷ்டி பெரும் விழாவை முன்னிட்டு சத்ரு சம்ஹாரயாக விழா

Update: 2021-11-05 05:30 GMT

அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைகள்.

சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் கந்த சஷ்டி பெரும் விழாவை முன்னிட்டு சத்ரு சம்ஹார யாக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் ஆறுபடை வீடுகளில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை உற்சவ தெய்வங்களாக சிறப்பு அலங்காரத்தில் ஒரே இடத்தில் எழுந்தருள செய்தனர். முருகப் பெருமான் முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட நவ கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது.

தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று யாக குண்டத்தில் 108 மூலிகைப் பொருட்கள் சமர்ப்பித்து மஹா பூர்ணாகுதி அளிக்கப்பட்டன. பின்னர் நவ கலசத்திற்கு உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதனையடுத்து கடம் புறப்பாடு நடைபெற்று சண்முகநாத பெருமானுக்கு கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டனர். தீபாராதனை காண்பிக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

Tags:    

Similar News