கொரோனா பாதிப்பால் ஸ்டுடியோவில் போட்டோக்களின் விலை உயர்வு

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 8 காபிக்கு ரூ. 120. மேக்ஸி (6x4) போட்டோ 2 காபிக்கு ரூ. 300 என உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2021-07-25 12:53 GMT

கொரோனா பாதிப்பு:போட்டோ பிரிண்ட் விலையை உயர்த்த சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் போட்டோகிராபர்ஸ் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து வீடியோ, போட்டோ ஸ்டுடியோக்கள் ஒன்றரை ஆண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால், ஏற்பட்ட பொருளாதார பாதிப்பைக் கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்த்தைச் சார்ந்த சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, சிங்கம்புணரி உள்பட அனைத்து ஊர்களில்லும் ஒரே மாதிரியாகத விலை உயர்த்தப்பட்டது .

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் இன்று மாலை நாடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 8 காபிக்கு ரூ. 120. மேக்ஸி (6x4) போட்டோ 2 காபிக்கு ரூ. 300 என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் அனைத்திற்கும் வீடியோ கவரேஜ் மற்றும் போட்டோ பிரிண்டுக்கும் உயர்த்தப்பட்ட புதிய விலை பட்டியலை வெளியிடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் போட்டோகிராபர்ஸ் சங்கத்தின் மூலம் வீடியோ, போட்டோ ஸ்டூடியோ அனைத்து உறுப்பினர்களுக்காக நாமும் உதவலாம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும், தனி நல வாரியம் அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதில், சிவகங்கை மாவட்டதலைவர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் பெஸ்ட் பாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் மணி ராஜன் மற்றும் சிவகங்கை கிளை செயலாளர் திருமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேலு, செந்தில், கிளை துணை தலைவர் முருகன், துணை செயலாளர் மூர்த்தி மற்றும் காளையார்கோவில் சங்கத்தின் தலைவர் மூர்த்தி, செயலாளர் ரமேஷ், பொருளாளர் காளிஸ், துணை தலைவர் பாண்டியன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News