நீதிக்குத்தலைவணங்கி உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

தமிழகத்தில் 11 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.நீதிக்கு தலைவணங்கி உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தும்

Update: 2021-07-10 08:21 GMT

நீதிக்குத்தலைவணங்கிஉள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

தமிழக அரசு  செப்டம்பர் 15 -ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டி: கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது.அது குறித்து ஆய்வு நடைபெறுகிறது.தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.அதிமுக ஆட்சியில் சமத்துவபுரங்கள் கவனிப்பாரற்று போனதால் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.

தற்போது தமிழகத்தில் உள்ள 420 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என்றும், புதிதாகவும் கட்டப்படும். தமிழகத்தில் 11 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை செம்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்த உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது என்றும் நீதிக்கு தலைவணங்கி தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.

Tags:    

Similar News