சிவகங்கையில் கனமழை: அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 139.60 மி.மீ மழை பதிவு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டத்தில் கனமழை. அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 139.60 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Update: 2021-11-26 09:35 GMT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டத்தில் கனமழை. அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 139.60 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள், 9 தாலுகாக்கள் உள்ளன. மேலும் 12 ஊராட்சிகள் ,12 பேரூராட்சிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 139.60 மி.மீ மழை பெய்துள்ளது.

அதனைத்தொடர்ந்து சிவகங்கை 96.00 மி.மீ, மானாமதுரை 16.00 மி.மீ, இளையான்குடி 30.00மி.மீ, திருப்புவனம் 114.60 மி.மீ, 3.30 மி.மீ, தேவகோட்டை 45.20, திருப்பத்தூர் 84.00 மி.மீ, காளையார்கோவில் 43.00 மி.மீ, காரைக்குடி 70.00மி.மீ, மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக மலையளவு 65.26 மி.மீ, மாவட்டத்தின் மொத்த மழை அளவு 456.80மி.மீ மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News