சிவகங்கை மீன் சந்தையில் ரசாயனம் தடவிய மீன்: அதிகாரிகள் திடீர் சோதனை

சிவகங்கையில் மீன் சந்தையில் ரசாயனம் தடவிய மீன் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு வந்த புகாரின் பேரில் திடீர் சோதனை நடத்தினர்

Update: 2022-01-23 05:59 GMT

மீன் சந்தையில் ஆய்வு மேற்கொள்ளும் உணவு பாதுகாப்பு அதிகாரி சரவணகுமார்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உழவர் சந்தை ரயில்வே நிலையம் அருகே தினசரி மார்க்கெட் ஆகிய இடங்களில் மீன் மற்றும் கறிக்கடைகள் இயங்கிவருகிறது. இங்கு உள்ள மீன் வியாபாரிகள் கேரளா, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற மீன் பிடி துறைமுகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.

இந்நிலையில், சிவகங்கையில் மீன் கடைகளில் மீன்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க உபயோகப்படுத்தப்படும் ரசாயன கலவை பயன்படுத்தி மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகங்கை உணவு பாதுகாப்பு அதிகாரி சரவணகுமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதனையடுத்து இன்று ரயில்வே நிலையம் அருகே உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி சரவணகுமார் திடீர் சோதனை மேற்கொண்டார். இச்சோதனையில், கெட்டுப்போன பதப்படுத்தப்பட்ட 12 கிலோ மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து கிருமி நாசினி கொண்டு அழிக்கப்பட்டது.

மேலும் அதனை தொடர்ந்து உழவர் சந்தை அருகே உள்ள மீன் கடைகளை ஆய்வு செய்து இரண்டு கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது

பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, மீன் விற்பனை கடைகள் அடைகப்பட்டிருந்த நிலையில் பத்திற்கு மேற்பட்ட கடைகள் மட்டுமே மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News