அரசு பள்ளியில் உணவு திருவிழா விதவிதமான பாரம்பரிய உணவுகளை தயாரித்த மாணவர்கள்

பாரம்பரியமிக்க உணவு வகைகளை 160 மாணவர்கள் செய்து வியப்பில் ஆழ்த்தினர்

Update: 2022-02-26 11:54 GMT

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில்தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டுவகை வகையான பாரம்பரிய உணவு செய்த மாணவர்கள்.

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வகை வகையான பாரம்பரிய உணவு செய்து  மாணவர்கள் அசத்தினர்.

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பழமையான பாரம்பரியமிக்க உணவு வகைகளை 160 மாணவர்கள் செய்து வியப்பில் ஆழ்த்தினர். ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற முறைகள் பின்பற்றப்படும் இந்த ஆண்டு பாரம்பரியமிக்க கருப்பு கவுனி, பாயாசம், குதிரைவாலி பாயாசம், வாழைஇலை அல்வா போன்ற பழமையான தமிழர்களுடைய பாரம்பரிய மிக்க சிறுதானிய உணவுகளை மாணவர்கள் செய்து ஆசிரியர்களுக்கு பரிமாறி விருந்து படைத்தனர். அதுமட்டுமின்றி மாணவர்கள் செய்த உணவின் தன்மையையும் எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News