தேர்தல் வாக்குறுதி நிறைவேறாததற்கு நிதி நெருக்கடியே காரணம்: இரா. முத்தரசன்

பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக தெரிவித்தார்

Update: 2021-12-17 15:00 GMT

திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றமால் இருப்பதற்கு தமிழக அரசின்  கடுமையான  நிதி நெருக்கடிதான் காரணம்   என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன் பேட்டி

மதசார்பற்ற நாட்டில் பிரதமராக இருக்கும் மோடி வாராணசியில் நடந்த  கோயில் திறப்பு விழாவில் மத உணர்வுகளை துண்டும் வககையில் பேசியுள்ளார்.  இதற்காக மக்களிடத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்ணின் திருமண வயது 21மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது

சிவகங்கையில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் பேசும் போது *தற்போது தமிழகத்தில் உரதட்டுபாடு கடுமையாக உள்ளது உரத்தின் விலை தற்போது தனியார் கடைகள் 600ருபாய்க்கு விற்பனை செய்வதை 1200க்கு விற்பனை செய்கின்றனர் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்*முன்னாள் அமைச்சர்கள் விடுகளில் மீது ரெய்டு குறித்த கேள்விக்கு ஒரு அமைச்சருக்கு எத்தனை வீடு இருக்க வேண்டும் 69இடங்களில் ரெய்டு என்றால் ஆதாரம் இல்லாமல் யாரும் சோதனை செய்யமாட்டர்கள் என்றார் இரா. முத்தரசன்.

Tags:    

Similar News