சிவங்கை மாவட்டத்தில் உர தட்டுப்பாடு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Update: 2021-11-03 10:53 GMT

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், வேளாண் இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் யூரியா, டி.ஏ.பி. உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கூட்டுறவு சங்கம் உடன் வந்த உரங்களை அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்கள் மட்டும் வழங்குகின்றனர் ,தனியார் உரக்கடைகளிலும் கிடைப்பதில்லை . இளையான்குடி பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இழப்பீடு தரவில்லை. அதேபோல் நெல் இழப்பீடு மாவட்டத்திலுள்ள 520 வருவாய் கிராமங்களில் 77 கிராமங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் வழங்க மறுக்கின்றனர். இதனால் இழப்பீட்டு காப்பீட்டை பதிய முடியவில்லை .

சிவகங்கை மாவட்டத்தில் 60 ஆயிரம் வைகை பாசன பரப்பு உள்ளது. பெரியாறு அணை, வைகை அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முறையாக வழங்கப்படவில்லை என  புகார் தெரிவித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பேசும்போது உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறைவான பகுதிகளுக்கு மட்டுமே பயிர் காப்பீடு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. விவசாயப் பணிகளுக்கு  தடையின்றி மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

Similar News