உரம் தட்டுப்பாடு: தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்

உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் விவசாயிகள் இரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று செல்லும் நிலை ஏற்பட்டது

Update: 2021-11-18 08:15 GMT

உரத்தட்டுப்பாட்டைக் கண்டித்து  சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

சிவகங்கை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளதை சீராக்காத தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் காளையார்கோவில் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..

சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்தி 70 ஆயிரம் ஹெக்டர் அளவில் விவசாயம் நடைபெறுகிறது. இந், நிலையில், இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்துள்ளதை தொடர்ந்து , அனைத்து பகுதிகளிலும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  கடந்த சில நாட்களாக யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன், விவசாயிகள் இரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று செல்லும் நிலை ஏற்பட்டது. கடுமையான உரத் தட்டுப்பாட்டைப் போக்காத தமிழக அரசை கண்டித்து, சிவகங்கை மாவட்ட பாஜகவினர் காளையார்கோவிலில்ல் சிவகங்கை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் கடந்த அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News