பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் வருகைக்கு அனுமதியளிக்க வேண்டும். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

Update: 2021-08-08 06:49 GMT

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். 

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு விரைந்து கல்வி புகட்ட வேண்டும் என்பதில் ஆசிரியர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆன்லைன் வகுப்புகள் கற்பதிலும், கற்பிப்பதிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிக சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

மேலும் உளவியல் ரீதயாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் நீதி மன்றமும் ஆரம்பப்பள்ளிகளை திறப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. எனவே சுகாதர வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆரம்ப நடுநிலைப்பள்ளி மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் மன உளைச்சல் இன்றி கல்வி கற்பிக்க முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் பணியிட மாறுதல் நடத்தாததால் பல ஆசிரியர்களது பதவி உயர்வு தேக்கம் அடைந்துள்ளது. எனவே ஒளிவு மறைவற்ற கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு பழிவாங்கப்பட்ட ஆசிரியர்களின் மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து மீளவும் பழைய இடத்திற்கே பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் 11 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஆசிரியர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தால் மறுக்கப்பட்ட சிகிச்சை செலவினத் தொகையை உடனடியாக பெற்று வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News