இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பிரசாரம்: மாவட்ட ஆட்சியர் தொடக்கம்

மாவட்டம்தோறும் 2850 குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரணி நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

Update: 2021-11-25 06:00 GMT

சிவகங்கையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சிவகங்கையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இல்லம் தேடி கல்வித்திட்டத்தை விழிப்புணர்வு பிரசாரத்தை  மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் இந்தக் கலைக்குழு கல்வி விழிப்புணர்வு பேரணி இந்த விழிப்புணர்வு பேரணி கிராமம் கிராமமாகச் சென்று குறைந்த காலத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் கல்வி இழப்புகளை ஈடுசெய்ய இந்த இல்லம் தேடி கல்வியை தன்னார்வலர் மூலம், உண்டு உறைவிடப்பள்ளி உடன் கூடிய பயிற்சி வகுப்புகள் எடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 126 கலைஞர்களுடன் இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கிராமம் கிராமமாக சென்று மூன்று நாட்களுக்கு பிரசாரம் நடத்தப்படும். இதில், மாவட்டம்தோறும் 2850 குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News