ஆய்வுக்கு வந்த இடத்தில் அடிப்படை தமிழில் பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்

மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அடிப்படை தமிழான இலக்கண பாடம் எடுத்தார்.

Update: 2021-09-01 12:53 GMT

சிவகங்கையில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அடிப்படை தமிழான இலக்கண பாடம் எடுத்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று பள்ளிகளில் 9,10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தாெடர்ந்து சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்பாேது வகுப்பறைக்குள் சென்ற ஆட்சியர் அங்கிருந்த மாணவர்களுக்கு அடிப்படை தமிழான இலக்கண பாடம் எடுத்தார். இது அங்கிருந்த ஆசிரியர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆட்சியர் பாடம் எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News