சிவகங்கை மாவட்டத்தில் சாதிச்சான்றிதழ் வழங்குவதில்அலைக்கழிப்பு:ஆட்சியரிடம் புகார்

எங்கள் சமூகத்தினர் கல்வி அறிவு பெறுவதற்கும் , அரசு சலுகை பெறுவதற்கும் தாமதமின்றி சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

Update: 2021-08-09 14:29 GMT

சிவகங்கை மாவட்டத்தில் சாதிச்  சான்றிதழ் வழங்குவதில் அலைக்கழிப்பு செய்வதாக  மாவட்ட வீர சைவப் பேரவையினர் மாவட்ட  ஆட்சியரிடம் புகார் கூறியுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம்,  மாவட்ட வீர சைவப் பேரவையின் சார்பில்,   நிர்வாகிகள்  மாவட்ட தலைவர் செல்லத்துரை ,  செயலாளர் ஆறுமுகம் ,  பொருளாளர் ராமகிருஷ்ணன் ,  அலுவலக தொடர்பாளர் காளிமுத்து உள்ப்பட நிர்வாகிகள் அனைவரும் வந்திருந்து  கோரிக்கை மனுவைக்  கொடுத்தனர்.

அந்த மனுவில், அவர்கள்  கூறியிருந்ததாவது:  சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 40- ஆயிரம் ஆண்டிப்பண்டாரம் சமூகத்தினர் வாழ்ந்து வருகிறோம். எங்களின் பாரம்பரிய தொழில் கோவில்களில் பூசாரியாக வேலை பார்ப்பது ஆகும் .   சிலர் கோவிலைச் சார்ந்து பூக்கட்டும் தொழிலை செய்து வருகிறோம் .   இன்னும் சிலர் விவசாயத் தொழிலையும் செய்து வருகிறோம் .

எங்களுக்கு அரசு சலுகையில் ஆண்டிப்பண்டாரம் என்ற சமூகத்தின் அடிப்படையில் சலுகைகளை பெற்று குழந்தைகளை படிக்க வைத்து வருகிறோம்.  இந்த சமூகம்  தமிழக அரசு கெஜட்டில்  2- வது  இடத்திலும் , இந்திய அளவில் 4-வது இடத்திலும் இருக்கிறது. 

இருப்பினும் சிவகங்கை மாவட்டத்தில் எங்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதில்  அரசு அதிகாரிகள் அலைக்கழிப்பு  செய்து  வருகிறார்கள்  , மேலும்  சில  அதிகாரிகள்  சாதிப் பெயரைச் சொல்லி கேலியும்  செய்கிறார்கள் .  எனவே எங்கள் சமூகத்தினர் கல்வி  அறிவு  பெறுவதற்கும் ,  அரசு சலுகை பெறுவதற்கும் தாமதமின்றி சாதிச்  சான்றிதழ் வழங்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News