முன்னோர்களுக்கு தர்பணம்: அரசின் தடையால் வெறிச்சோடிய சிவகங்கை மாவட்ட கோவில்கள்

கோவில் வாசல்களுக்கு வந்த சில பக்தர்கள அங்கிருந்த மாடுகளுக்கு அகத்திக் கீரை, வாழைப் பழங்கள் கொடுத்து சூரிய நமஸ்காரம் செய்து சுவாமியை வெளியிலிருந்து கும்பிட்டுச் சென்றனர்.

Update: 2021-08-08 06:57 GMT

கொரானா கட்டுப்பாடு தடை காரணமாக முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் நிகழ்வுக்கு மக்கள் வராத சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயில்கள் கூட்டமின்றி காணப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தில் தென் திருப்பதி என அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கட முடையான் கோவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று,ஆயிரக்கணக்கான உறவினர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவர். ஆனால் தற்போது கொரானா தொற்று காரணமாக, கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டு தமிழக அரசு தடைவிதித்துள்ளது..

இதனால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடிய வாரிசுகள் மற்றும் உறவினர்கள் வராத காரணத்தால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல், கோவிலூர் கொற்றாளீஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் வாசல்களுக்கு வந்த சில பக்தர்கள அங்கிருந்த மாடுகளுக்கு அகத்திக் கீரை, வாழைப் பழங்கள் கொடுத்து சூரிய நமஸ்காரம் செய்து சுவாமியை வெளியிலிருந்து கும்பிட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News