சிவகங்கை-கிறிஸ்டல் நிறுவனம்-சம்பளம் வழங்க துப்புரவு பணியாளர்கள் அமைச்சர் காலில் விழுந்து கோரிக்கை

சிவகங்கை-கிறிஸ்டல் நிறுவனம்-சம்பளம் வழங்க துப்புரவு பணியாளர்கள் அமைச்சர் காலில் விழுந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2021-05-27 10:14 GMT

தமிழகமெங்கும் கொரானா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வில்லா ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு காரணமாக அவதியுற்று வந்த சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிறிஸ்டல் நிறுவனத்தின் மூலம் பணிபுரியும் முன் களப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களான அரிசி பருப்பு, மற்றும் மளிகை போன்ற நிவாரண பொருட்களை ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் KR.பெரியகருப்பன் , மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினர்.

அதன்பின் நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் சென்ற போது கிறிஸ்டல் நிறுவனம் எங்களுக்கு முறையான சம்பளம் வழங்குவதில்லை என்று கண்ணீருடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் காலில் விழுந்து சம்பளம் முறையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்

Tags:    

Similar News