கொரானா நிவாரண நிதி கிடைக்க வில்லை: ஆட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

கொரனா நிவாரணநிதி கிடைக்கவில்லையெனக்கூறி சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-26 10:58 GMT

அரசின் கொரோனா நிவாரணநிதி கிடைக்கவில்லையெனக்கூறி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில், மூன்றாம் பாலினத்தவர் 622 பேர் உள்ளனர். இவர்களுக்கும், கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், பெயரளவில் சிலருக்கு மட்டும் நிவாரண நிதி வழங்கி விட்டு, மற்றவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிவாரணநிதி வழங்க வில்லை என்று கூறி, இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து போக அறிவுறுத்தினர். கடந்த 2 மாதங்களாக தினமும் வந்து அலைந்து கொண்டிருப்பதாகவும் காலையிலிருந்து சாப்பிடாமல் கூட காத்திருப்பதாகவும், காவல் துறையினரிடம் திருநங்கைகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News