சிவகங்கையில் கொரோனா பரவல் 7.3 சதவீதமாக அதிகரிப்பு: சுகாதாரத் துறை தகவல்

சிவகங்கையில் கொரோனா பரவல் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-01-21 04:01 GMT

பைல் படம்.

கொரோனா பரவலை தடுக்க முககவசம் உயிர் கவசம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 2வது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் வண்ணம் உள்ளது.

குறிப்பாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

சிவகங்கையில் கொரோனா தொற்று பரவல் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.1043 பேருக்கு பரிசோதனை செய்ததில் 80 பேருக்கு தோற்றது உறுதியானது. மாவட்டத்தில் இதுவரை 21ஆயிரத்தி 897 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது சிகிச்சைக்குப் பின் 20 ஆயிரத்து 674 பேர் குணமடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர் கடந்த ஐந்தாம் தேதி பரிசோதனை செய்ததில் 1194 பேரில் 10 பேர் தொற்று உறுதியானது. தற்போது நேற்று பரிசோதனையில் 1043 பேருக்கு 80 பேர் தொற்று உறுதியாகிறது. கடந்த 13 நாட்களில் 100 சதவீதம் 0.8 லிருந்து 7. 3 ஆக அதிகரித்துள்ளது .

தொடர்ந்து மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முக கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதனைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய கடமை மக்களிடம் உள்ளது. என்பதை அறிந்து தேவையின்றி வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News