மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 94 பேருக்கு கொரோனா : பரவல் 5.5 % அதிகரிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2022-01-22 03:30 GMT

சிவகங்கை மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர்

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பு மற்றும் சிவகங்கை தாலுகா டிஎஸ்பி பால்பாண்டி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் உட்பட ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  மாவட்டத்தில்கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.   ஜனவரி துவக்கத்தில் கொரோனா பரவல் 0.8 மட்டுமே இருந்தது.  தற்போது 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், சமூக இடைவெளி முகக்கவசம் அணிந்து செல்வது அவசியம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  நேற்று முன்தினம் பரிசோதனையில் சிவகங்கை சுகாதார துணை இயக்குனர் மற்றும் 4 டாக்டர்கள் உட்பட 94 பேருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கெனவே டிஎஸ்பி போலீஸ் என முன் களப்பணியில் ஈடுபட்டுள்ள பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News