உத்திரபிரதேசத்தில் விவசாயிகள்படுகொலை: சிவகங்கையில் காங்கிரஸார் கண்டன ஆர்பாட்டம்

உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-10-05 07:41 GMT

உத்தர பிரதேச  அரசைக்கண்டித்து சிவகங்கையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கை ஆட்சியர் வாளகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்.

ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், நேற்று உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகள் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது, ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் காரை ஏற்றியுள்ளார்.

அதிலும், அதன் பின்பு அங்கு நடந்த வன்முறையிலும் 8 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவையும் அவருடைய மகனையும் கைது செய்ய வேண்டும், உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News