லாபத்தில் இயங்கிய நிறுவனங்களை விற்றதில்லை: கார்த்திசிதம்பரம் எம்பி பேட்டி

அரசு சொத்துகளை குறைவான தொகைக்கு 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கும் விற்பதற்கும் வேறுபாடு இல்லை என்றார்

Update: 2021-08-26 16:00 GMT

சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்திசிதம்பரம் 

காங்கிரஸ் ஆட்சியில் லாபத்தில் இயங்கிய நிறுவனங்களை தனியாருக்கு விற்றதில்லை என கார்த்திசிதம்பரம் எம்பி தெரிவித்தார்.

 சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு சொத்துக்களை குறைவான தொகையை பெற்று கொண்டு 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கும், விற்கிறதுக்கும் என்ன வித்யாசம் உள்ளது. தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்களுக்கு கொடுப்பதற்காக இதை செய்கிறார்கள். தனியார் மூலம் புதிய நிறுவனங்களை உருவாக்க லைசன்ஸ் கொடுக்கலாம். அதைவிடுத்து, மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கியதை கொடுக்கலாமா? லாபத்தில் இயங்கும் எல்ஐசி ஏன்? தனியாருக்கு கொடுக்க வேண்டும்.  இதேபோல்தான், சோவியத் யூனியன் உடையும்போது ரஷ்யாவில் நடந்தது. இச்செயலை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கும். காங்கிரஸ் ஆட்சியில்,  லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்தது கிடையாது. நஷ்டத்தில் இயங்கியதைத்தான் தனியாருக்கு கொடுக்கப்பட்டது. பாஜகவினர் இந்து மனுதர்ம சாஸ்திரப்படி சமுதாயத்தை கொண்டு வர நினைக்கிறார்கள். இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கி கொச்சைப்படுத்துகின்றனர் என்றார்.

Tags:    

Similar News