விவசாயிகள் பயன்பெறும் திட்டங்களை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்த வேண்டும்.

மத்திய அரசுக்கும், பிற மாநிலங்களுக்கும் முன்னோடியாக பல நல்ல திட்டங்களை அறிவிக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது

Update: 2021-09-28 08:30 GMT

சிவகங்கையில் நடைபெற்ற நிழ்விவ் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் அந்த திட்டங்களை கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும். விவசாய தொழிலை, விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு தாராளமாக முன்வந்துள்ளது என்றார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்.

சிவகங்கையில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்  மேலும் பேசியதாவது:  நான்கு மாத குறுகிய காலத்திற்குள், தேர்தல் நேரத்தில் கொடுத்த 505 வாக்குறுதிகளில், சுமார் 202 வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். மத்திய அரசுக்கும், பிற மாநிலங்களுக்கும்  முன்னோடியாக பல நல்ல திட்டங்களை அறிவிக்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது.நகை கடனை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் சில குளறுபடி நடந்துள்ளன. அதனை சீராய்வு செய்து,முறையாக நகை கடன் பெற்றிருக்கும் அனைவருக்கும் நிச்சயம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.


Tags:    

Similar News