சிவகங்கை பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி நிழற்கூரை தூண் சேதம்

சிவகங்கை பேருந்து நிலையத்தில் பஸ் மோதி நிழற்கூரை தூண் சேதமடைந்ததால் மேற்கூரை பணிகளை முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-08-18 11:08 GMT

பேருந்து மோதியதில் சேதமடைந்த இரும்புத்தூண்.

சிவகங்கை பேருந்து நிலையத்தில் மதுரை-மானாமதுரை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து நிழற்கூரை அமைப்பதற்காக ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இதன்படி, பேருந்துகள் நிழலில் நின்று செல்ல வழிவகை செய்வதாக தெரிவித்தனர். இதற்காக நல்ல நிலையில் இருந்த காங்கிரீட் தளத்தை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் தூண்கள் அமைத்து பல மாதங்களாகியும் கூரை, காங்கிரீட் தளம் அமைத்தல் போன்ற எந்த பணிகளும் நடக்கவில்லை.

இதனால், கோடை வெயிலின்போது பேருந்து நிலைய வளாகம் புழுதியைக் கிளப்பும் இடமாகவும், மழைக்காலங்களில் சகதி காடாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் அரசு பஸ் ஒன்று மோதியதில் காங்கிரீட் தூண்களும், இரும்பு தூண்களும் சேதமானது. இனிவரும் காலங்களில் பெரிய தூண்களும் சேதம் ஆவதற்கு முன்னரே மேற்கூரையை முழுமைபடுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News