பிஎஸ்என்எல் இணையதளம் துண்டிப்பு

சிங்கம்புணரி பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் பி.எஸ்.என்.எல். இணையதள இணைப்பு துண்டிப்பு

Update: 2021-03-21 05:41 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் பி.எஸ்.என்.எல். இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அரசின் சேவை மையங்கள் செயலிழந்து உள்ளன. சிங்கம்புணரி திருப்புத்தூர் சாலை தேசிய நெடுஞ்சாலை பிரிவினரால் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின் காரணமாக பாலங்கள் வேலை சீரமைக்க ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆங்காங்கே ரோட்டின் ஓரங்களில் ஆழமான குழிகள் தோண்டப்படுகின்றன.

இதனால் திருப்புத்தூருக்கும் சிங்கம்புணரிக்கும் இணைப்பாக செல்லும் கண்ணாடி இழை வடம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. இதனால் பிஎஸ்என்எல் சேவையின் இணையதள தொடர்பு அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும் இ-சேவை மையங்கள், அரசு அலுவலகங்களில் உள்ள சேவைகள் தடைபடுவதால் இணையதளம் மூலமாக செய்யப்படும் அனைத்து பணிகளும் கால தாமதம் ஆகின்றன. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரசின் சான்றிதழ் பெறுவதில் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. ஆகவே திருப்புத்தூர் சிங்கம்புனரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் முடியும் வரை மதுரை – சிங்கம்புணரி, நத்தம் – சிங்கம்புணரி, துவரங்குறிச்சி - சிங்கம்புணரி ஆகிய வகைகள் ஏதாவது ஒரு கூடுதல் இணைப்பு செய்து தரவேண்டும், பொது மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அரசின் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை - சிங்கம்புணரி கண்ணாடி இழை வடப்பாதையில் சீரமைப்பு செய்து ஒரு தொடர்பு துண்டிக்கப்பட்டால் மறு தொடர்பு மூலம் இணையதள சேவைகள் இப்பகுதியில் தங்கு தடையின்றி கிடைக்க வழி வகை செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News