பாஜக ஆளுநரின் நடவடிக்கையை கண்டிக்காமல் இருக்கிறது:சிபிஎம் நிர்வாகி ராமகிருஷ்ணன்

அகில இந்திய அளவில் மதரீதியில் மக்களை பிளவு படுத்த பாஜக முயற்சிப்பது மோசமான விளைவை உண்டாக்கும் என்றார்

Update: 2022-02-11 01:15 GMT

சிவகங்கையில்  பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன்

ஆளுநரின் நடவடிக்கையை  கண்டிப்பவர்களை, கண்டிக்கும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருந்து வருகிறது என்றார்  ஜி. இராமகிருஷ்ணன்.

சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: திமுக கூட்டணி பலமான கூட்டணி என்பதால் பெரும்பாலான நகராட்சி, மாநகராட்சி பகுதிகளை கைப்பற்றும். பொது பட்டியலில் கல்வி இருப்பதால் மத்திய அரசும் சட்டம் இயற்றலாம், மாநில அரசும் சட்டம் இயற்றலாம். நீட் தேர்விற்கு,  ஜல்லிகட்டுக்கு விலக்கு கேட்டது போல் விலக்கு தான் கேட்கின்றோம். திருத்தம் கோரவில்லை என்றார்.

இதில், ஆளுநரின் நடவடிக்கையை கண்டிக்காமல், அவரைக் கண்டிப்பவர்களை, கண்டிக்கும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருந்து வருகிறது. மேலும் மாணவர்களிடையே பிரிவினையை உருவாக்கும் பாஜகவினால் விபரீதங்கள் ஏற்படும், அகில இந்திய அளவில் மதரீதியில் மக்களிடத்தில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. இது மோசமான விளைவை உண்டாக்கும்.. காவல்துறையில் குறைபாடுகள் உள்ளது .எனவே காவல்துறை நிர்வாகத்தை நல்லமுறையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஜி.ராமகிருஷ்ணன் 


Tags:    

Similar News