தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

Update: 2021-04-16 12:39 GMT

சிவகங்கையில் விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 220 கிலோ தடை செய்த புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை நேருபஜார் பகுதியில் போலி சிகரெட்டுகள் விற்பனைக்காக வைத்துள்ளதாக நகர காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே அங்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்ட நிலையில் பேருந்து நிலையம் எதிரே பாண்டிகோவில் தெருவில் அமீர்,மற்றும் பிரபு என்பவர்களின் குடோன்களில் சோதனை நடத்தியதில் அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்ட போலீசார் உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் அங்கு சோதனை மேற்கொண்டதில் சுமார் 220 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா, உள்ளிட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைத்திருந்ததை கண்ட அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்து அபராதமும் விதித்தனர்.

Tags:    

Similar News